

தாடை வளராததால் வாயைத் திறக்க முடியாமல் அவதிப்பட்டுவந்த இரண்டரை வயது சீனக் குழந் தைக்கு சென்னை பாலாஜி முகச் சீரமைப்பு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து கீழ்தாடை வளரவைக்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த தம்பதியர் லீடெக் சுவான் - டான் வீவியன். இரு வரும் சிங்கப்பூரில் விற்பனை பிரதி நிதிகளாக பணியாற்றுகின்றனர். இவர்களது இரண்டரை வயது மகன் சேய்ஸ்லீ. ‘பியர் ராபின் சிண்ட்ரோம்’ எனப்படும் பிறவிக் குறைபாட்டால் குழந்தையின் தாடை முழு வளர்ச்சி அடையாமல் இருந்தது. மேலும், மண்டை ஓட்டின் எலும்பு 2 பக்கமும் தாடை எலும்புடன் இணைந்து இருந்தது.
இதனால், வாயைத் திறக்க முடியாமலும், மூச்சுத் திணறாலும் குழந்தை அவதிப்பட்டது. குறட்டை தொந்தரவும் இருந்தது. சிங்கப்பூர், ஹாங்காங் உட்பட பல இடங்களிலும் முகச்சீரமைப்பு நிபுணர்களை லீடெக் தம்பதியர் சந்தித்தனர். குழந்தையின் இப்பிரச்சினையை சரிசெய்வது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை பாரதிதாசன் சாலையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவ மனைக்கு குழந்தையுடன் பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் வந்தனர். மருத்துவமனை இயக்குநரும், முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பரிசோதனை செய்தார். அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என்றார்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை பாரதிதாசன் சாலையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவ மனைக்கு குழந்தையுடன் பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் வந்தனர். மருத்துவமனை இயக்குநரும், முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பரிசோதனை செய்தார். அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என்றார்.
அவரது தலைமையிலான மருத்துவக் குழுவினர் குழந்தையின் வாய்க்குள் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 2 பக்க தாடை எலும்புகளையும் வெட்டி அகற்றி னர். பின்னர், புதிதாக எலும்பை வளரவைக்க வாய்க்குள் தாடையின் 2 பக்கமும் ‘பீடியாட்ரிக் மேண்டிபியூலர் டிஸ்ட்ராக்டர்’ என்ற கருவியை பொருத்தினர். இதை இயக்கியதன் மூலம் தாடை எலும்பு தினமும் அரை மி.மீ. வளரத் தொடங்கியது. ரத்தக்குழாய், நரம்பு, தோலும் வளர்ந்தன. 3 மாதத்தில் தாடை எலும்பு 27 மி.மீ. வளர்ச்சி அடைந்தது.
இதையடுத்து, வாய்க்குள் பொருத்தப் பட்டிருந்த கருவி அகற்றப்பட்டது. தற்போது குழந்தையால் நன்றாக வாய் திறந்து பேசவும், மூச்சு விடவும் முடிகிறது. குறட்டை விடாமல் நன்றாக தூங்குகிறது.
இதுபற்றி பாலாஜி பல் மற்றும் முகச் சீரமைப்பு மருத்துவமனை இயக்குநரும், முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரு மான டாக்டர் எஸ்.எம்.பாலாஜி செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நாட்டிலேயே முதல்முறையாக இரண் டரை வயது குழந்தையின் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து கீழ்தாடை எலும்பு வளர வைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி தற்காலிக மானது. குழந்தையின் 7 வயதில் கீழ்தாடை வளர்ச்சிக்காக மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும். அப்போது விலா எலும்பு - குறுத்தெலும்பு இணையும் இடத்தில் உள்ள பகுதியை எடுத்து தாடையின் 2 பக்கமும் பொருத்தப்படும். பிறகு, அவனது வளர்ச்சிக் கேற்ப கீழ்தாடையும் வளரும். மிகவும் சிக்க லான இந்த அறுவை சிகிச்சையை வெளிநாடு களில் செய்ய ரூ.40 லட்சம் வரை செலவாகும். இங்கு ரூ.4 லட்சத்தில் குழந்தையின் பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது என்றார்.