டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்

நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்; தினகரன்

Published on

நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 448 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (மே 19) மட்டும் 688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, கரோனா தொற்று அச்சத்தால் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 4-ம் கட்ட ஊரடங்கில் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என, டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 20) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொதுமுடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதிப் பெருமூச்சு விட முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதனைப் பரிசீலித்து அறிவிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in