

வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் காரணமாக தூத்துக்குடி பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மணிக்கு சுமார் 75 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி, காலாங்கரை, வீரநாயக்கன்தட்டு, கூட்டாம்புளி, குலையன்கரிசல், சிவத்தையாபுரம், சிவஞானபுரம், சாயர்புரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால் வேதனையடைந் துள்ள விவசாயிகள், தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண் டும் எனக் கோரிக்கை விடுத் துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, பிள்ளைகுளம், உலகன்குளம், ஓடைக்கரை உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி வீசியதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன.
சேரன்மகாதேவி வட்டாட்சியர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சேதம் அடைந்த வாழைகளைப் பார்வையிட்டனர்.