Published : 20 May 2020 07:29 AM
Last Updated : 20 May 2020 07:29 AM

தொழில்முனைவோர், மாத சம்பளதாரருக்கு கூட்டுறவு வங்கியில் தனிநபர் கடன், நகைக்கடன்- அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர், மாத சம்பளதாரர்களுக்கு நகைக்கடன், தனிநபர் கடன் கூட்டுறவு வங்கி களில் வழங்கப்படுவதாக அமைச் சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பயிர்க்கடன், உரம் வழங்குவது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை குறுவை சாகுபடிக்காக, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தாமதமின்றி பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 69 ஆயிரத்து 882 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளன.

ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கடன் வழங்கும் சிறப்பு திட்டங்களை கூட்டுறவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நகை அடமானத்தின்பேரில் கடன் வழங்கப்படும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 6 சதவீத வட்டியும், 24 சமகால தவணைகளில் திரும்பிச் செலுத்தும் வகையில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கும் தனிநபர் கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாத சம்பளதாரர்களுக்கு ரூ.2 லட்சம் வரை 5 சதவீதம் ஆண்டு வட்டியில் நகைக்கடன் வழங்கப்படும். இக்கடன் 12 மாதங்களுக்குள் திரும்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x