Published : 20 May 2020 07:25 AM
Last Updated : 20 May 2020 07:25 AM

திறக்கப்படும் என அரசு அறிவித்தும் ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் புதுச்சேரியில் மூடிக்கிடக்கும் மதுக்கடைகள்

திறக்கப்படும் என அரசு அறிவித் தும் ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் புதுச்சேரியில் மதுக் கடைகள் மூடிக்கிடக்கின்றன.

கரோனா அச்சுறுத்தலால் புதுச் சேரியில் கடந்த மார்ச் 24-ம் தேதி சாராயம், கள்ளுக்கடைகள் மற்றும் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே, கள்ளச்சந்தையில் மது விற்பனையானதாக புகார்கள் எழுந்ததால் ஆளுநர் கிரண்பேடி தலையீட்டால் 100 மதுக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

தற்போது, 4-ம் கட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்ததால் தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் மதுக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது. இதற்காக நேற்று முன்தினம் காலை அமைச் சரவைக் கூட்டம் கூடியது. தொடர்ந்து, “புதுவையில் மே 19 (நேற்று) முதல் மதுக்கடைகள் திறக்கப்படும்” என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். திடீரென நேற்று முன்தினம் இரவு மீண்டும் அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து, மதுக்கடைகள் திறப்பை முதல்வர் தள்ளி வைத் தார்.

மதுக்கடைகளைத் திறப்பது தொடர்பான கோப்பு ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பப்பட்டது. அவர் ஒப்புதல் அளிக்காததால் திறப்பு தள்ளி வைக்கப்பட்டதாக கலால் துறையினர் கூறுகின்றனர்.

இதற்கிடையே, “இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களுக்கு கரோனா வரி (நிவாரணப் பணிகளுக்கான வரி) விதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் குறிப்பிட்டு மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோப்புக்கு இதுவரை ஆளுநர் கிரண்பேடி அனுமதி வழங்கவில்லை” என்று கலால் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மதுபான உரிம ஏலம்

இதற்கிடையே ஆளுநர் கிரண்பேடி, “கரோனா சூழ லைத் தொடர்ந்து அரசுக்கு சொந்தமானதை மீட்டெடுப்பதை நோக்கி நிர்வாகம் முன்னேறுகிறது. அனைத்து மதுபான உரிமங் களுக்கும் திறந்த ஏல முறை பின்பற்றப்படும். கடந்தகால மதுபான விஷயங்களை சிபிஐ விசாரிக்கிறது. கலால் உட்பட இதர துறைகளில் மத்திய தணிக்கைத் துறை அளித்த ஆட்சேபனைகள் அனைத்தும் ஒருங்கே தொகுக் கப்படும். தணிக்கை மூலம் குறைபாடுகள் தவிர்க்கப்படும். மக்களின் பணம் அனைத்தும், மக்களின் நலவாழ்வு மற்றும் அவர்களின் கவனிப்புக்காகவே திரும்ப அளிக்கப்பட வேண்டும்” என்று நேற்று வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ளார்.

மது வாங்க இணையத்தில் டோக்கன்

மதுக்கடைகளைத் திறப்பது ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சூழலில், புதுச்சேரி கலால் துறை ஆணையர் சஷ்வத் சவுரப், குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தேசிய தகவலியல் மையம் ஆன்லைனில் மது விற்பனை செய்ய மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் ஆதார் எண்ணை இணைத்து மது வாங்குவதற்கான டோக்கனை பெற முடியும். இதற்காக புதுச்சேரியை சேர்ந்தோருக்கான ஆதார் விவரங்களை குடிமைப்பொருள் வழங்கல் துறை தேசிய தகவலியல் மையத்துக்கு தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, மது வாங்குவோரின் வயது 18-க்கு மேல் இருப்பதை ஆதார் மூலம் உறுதி செய்ய முடியும். அத்துடன் புதுச்சேரியைச் சேர்ந்தோருக்கு மட்டுமே மது விற்பனை செய்வதையும் உறுதிசெய்ய முடியும். இவற்றை ஆதார் மூலம் ஆன்லைனில் உறுதி செய்த பின்னரே டோக்கன் கிடைக்கும். இந்த முறை விரைவில் நடைமுறைக்கு வரும். அதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x