Published : 16 Aug 2015 09:44 AM
Last Updated : 16 Aug 2015 09:44 AM

போராட்டத்தை தூண்டுவதாக பேராசிரியர் மீது புகார்: மாணவர்கள் வகுப்புக்கு திரும்ப வேண்டும் - சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வேண்டுகோள்

மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை பல் கலைக்கழக பதிவாளர் பி.டேவிட் ஜவகர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை தலைவராக பணியாற்றிய ஜி.கோட்டீஸ்வர பிரசாத், பல் கலைக்கழகத்தில் புதியதாக தொடங்கப்பட்ட இருக்கைக்கு மாற் றப்பட்டார். அதைத் தொடர்ந்து அரசியல் துறையின் தலைவராக (பொறுப்பு) இராமு.மணிவண்ணன் நியமிக்கப்பட்டார்.

கோட்டீஸ்வர பிரசாத், 2016-ல் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக தாய் துறையிலிருந்து பணி ஓய்வு பெற ஏதுவாக அவர் மீண்டும் அரசியல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், அப்பதவியில் இருந்து மணி வண்ணன் விடுவிக்கப்பட்டார். இதில் உள்நோக்கம் இல்லை. மணிவண்ணனை விடுவித்து, அவரைவிட இளையவர் யாரையும் துறைத் தலைவராக பணி யமர்த்தவில்லை. மணிவண்ணன் மீது அதே துறையைச் சேர்ந்த பெண் பேராசிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார் அதில், அவர் மீது 27 குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். அது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப் பட்டு ஆட்சிமன்றக் குழுவில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மாணவர்களை கேடய மாக மணிவண்ணன் பயன்படுத்து கிறார். நிர்வாகத்தின் மீதும் பொய் யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவரது தூண்டுத லால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படு கிறது. எனவே, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடி யாக வகுப்புக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x