

தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேசிய தொற்று நோய் இயக்குநர் மனோஜ்முரேக்கர் பாராட்டு தெரிவித்துள் ளார்
கரோனா சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை ஐசிஎம்ஆர், நாடு முழுவதும் ஆய்வு செய்து வருகிறது. தமிழகத்திலும் ஐசிஎம்ஆர் குழுவினர் ஆய்வுநடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவையில் ஆய்வு
கோவையில் சில தினங்களுக்குமுன் ஐசிஎம்ஆர் குழுவினர், பொதுமக்களிடம் இருந்து சளி, ரத்தமாதிரிகளை எடுத்து சோதனை செய்துள்ளனர். அதேபோல், சென்னையிலும் மாதிரிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முடிவுகளை வைத்து, சமூக பரவல்ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்துஅடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) கீழ், சென்னையில் செயல்படும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குநரும், கரோனா தேசிய பணிக் குழுவைச்சேர்ந்த முன்னணி உறுப்பினருமான டாக்டர் மனோஜ் முரேக்கர் மற்றும் துணை இயக்குனரும், தமிழக அரசின் மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினருமான பிரப்தீப் கவுர் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர்.
அப்போது, கரோனா வைரஸ்தொற்று பரவல் தடுப்பு மற்றும்சிகிச்சை தொடர்பாக தமிழக அரசுமேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளை பாராட்டினர்.