

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் மேலாலத்தூரில் 12 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 7 செ.மீ, ஆரணியில் 6 செ.மீ, திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் 5 செ.மீ, வேலூர் மாவட்டம் வாலாஜா, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ மழை நேற்று முன் தினம் பெய்துள்ளது.