Last Updated : 19 May, 2020 04:21 PM

 

Published : 19 May 2020 04:21 PM
Last Updated : 19 May 2020 04:21 PM

உடல்நலமின்றி தவித்த ஆதரவற்ற முதியவர்: உதவிக்கரம் நீட்டிய காரைக்குடி போலீஸார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உடல்நலமின்றி தவித்த ஆதரவற்ற முதியவருக்கு போலீஸார் உதவிக்கரம் நீட்டினர்.

காரைக்குடி செக்காலைரோடு பகுதியில் 70 வயதுள்ள ஆதரவற்ற முதியவர் சுற்றித்திரிந்தார். அவருக்கு அங்குள்ளவர்கள் உணவு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் உணவு உண்ண முடியவில்லை. இதையடுத்து அவர் கேட்பாரின்றி மூன்று நாட்களாக வீதியில் கிடந்துள்ளார்.

முதியவர் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பாண்டியன் என்பவர் காரைக்குடி டிஎஸ்பி அருணுக்கு தகவல் கொடுத்தார்.

டிஎஸ்பி உத்தரவில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் போலீஸார் ஆதரவற்ற முதியவரை மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இயந்திரமயமான வாழ்க்கையில் மற்றவர்களை பற்றி கவலைப்படாத இக்காலக்கட்டத்தில் ஆதரவற்ற முதியவருக்கு உதவிக்கரம் நீட்டிய காரைக்குடி போலீஸாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x