

நூறு நாடுகளின் தேசியக் கொடியை அடையாளம் கண்டு, அந்நாடுகளின் பெயரைக் கூறி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்ற ஒன்றரை வயது சிறுவனை ஆட்சியர் பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் வாலாந்தரவையைச் சேர்ந்தவர் மருத்துவர் முதிலேஸ்வரன், மாவட்ட தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவரது மனைவி அபர்ணா. இவர்களுடைய ஒன்றரை வயது மகன் நிவின் அத்விக்.
இச்சிறுவன் நம் நாட்டின் தேசியக் கொடியையும் அதன் பொருள் விளக்கத்தையும் தெளிவாகக் கூறுகிறார்.
இதுபோல அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 100 நாடுகளின் தேசியக் கொடியை அடையாளம் கண்டு, அந்த நாட்டின் பெயரை கூறுகிறார். இதற்காக இச்சிறுவனின் சாதைனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரீத்து சான்றிதழ், பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.
இந்நிலையில் இச்சிறுவனின் பெற்றோர் ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் வாழ்த்துப்பெற நேற்று அழைத்து வந்திருந்தனர். ஆட்சியர் அச்சிறுவனை பாராட்டினார்.