

சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள 'உம்பன்' புயல், மேற்குவங்க மாநி லம் மற்றும் வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்க வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலை வர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிதீவிர புயலாக இருந்த 'உம்பன்' புயல், தற்போது சூப்பர் புயலாக மாறியுள்ளது. இது மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அப்பகுதியில் நாளை (மே 20) கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
புயல் காரணமாக மத்திய, வடக்கு வங்கக் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப் படும். எனவே, அடுத்த 2 நாட் களுக்கு இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புயல் தீவிரமாகி நகர்வதால் ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா உள்ளிட்ட 6 மாநிலங்களில் வரும் 21-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ‘உம்பன்’ புயல், மேற்கு வங்கம், ஒடிசா மற் றும் வங்கதேச கடலோர பகுதி களை தாக்கும். இதன் விளைவாக இந்தப் பகுதிகளில் நாளை மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்கு வங்கம், ஒடிசா மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோரப் பகுதி களில் வசிக்கும் சுமார் 11 லட்சம் பேரை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கவனிக்க பல்வேறு இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
'உம்பன்' ஏன் சூப்பர் புயல்?
'உம்பன்' புயல் ஏன் சூப்பர் புயல் என அழைக்கப்படுகிறது என்று எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது, ‘‘ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, காற்று சுழலும் வேகத்துக்கு ஏற்ப புயல், வலுவான புயல், தீவிர புயல், அதிதீவிர புயல், சூப்பர் புயல் என வகைப்படுத்தப்படுகிறது. 120 நாட்டிகல் மைலுக்கு மேல் வேகம் இருந்தால் அதை சூப்பர் புயல் என அழைக்கிறோம். அந்த நிலையை ‘உம்பன்’ எட்டியுள்ளது. ஒரு நாட்டிகல் மைல் என்பது 1.89 கி.மீ. ஆகும்’’ என்றார்.