

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80-ஐ கடந்துள்ளது. மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வருவோரால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஓரிரு நாளில் 100-ஐ எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 70 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலையில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். 28 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 52 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 49 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 2 பேரும், மதுரை அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து, குறிப்பாக மும்பையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80-ஐ கடந்துள்ள நிலையில், மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தொடர்ந்து பலர்hgv வந்து கொண்டிருப்பதால், இந்த எண்ணிக்கை ஓரிரு நாட்களில் 100-ஐ எட்டும் நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.