Published : 07 Aug 2015 10:39 AM
Last Updated : 07 Aug 2015 10:39 AM

கடல் பாம்பு கடித்ததால் உயிருக்கு போராடிய மீனவர்: குணப்படுத்தி அரசு பொது மருத்துவமனை சாதனை

கடல் பாம்பு கடித்ததால் உயிருக்கு போராடிய மீனவரை குணப் படுத்தி அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையின் நச்சியல் துறை தலைவர் எஸ்.ரகுநந்தனன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

எண்ணூரைச் சேர்ந்த மீனவர் பாபு (34) கடந்த மாதம் 23-ம் தேதி தான் பிடித்த மீன்களை வலையில் இருந்து எடுக்கும்போது அதில் சிக்கியிருந்த கடல் பாம்பு கடித்ததால் அவர் கண் பார்வை மங்கிய நிலையில், மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடல் பாம்பு கடித்து மீனவர் ஒரு வர் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறை. அவருக்கு கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ ருக்கு பாம்பின் நஞ்சால் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.

பாம்பு கடித்தவுடன் எந்த கை வைத்தியமும் செய்யத் தேவை யில்லை. நேராக மருத்துவ மனைக்கு வந்தால் அங்கு தரமான சிகிச்சை வழங்கி நோயாளியை காப்பாற்றிவிடலாம். பாம்பு கடி யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை எடுத்து சுமார் 20 நிமிடங்கள் வைத் திருப்போம். அந்த ரத்தம் உறை யாமல் இருந்தால் அவரது உடலில் விஷம் உள்ளது என்பது உறுதியா கும். பின்னர் சிகிச்சையைத் தொடருவோம்.

மாநில அளவில் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க 2,039 மருத்துவர் கள், 1,458 செவிலியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். தற் போது தமிழகத்தில் 66 அரசு பொது மருத்துவமனைகளில் பாம்பு, தேள் மற்றும் பூச்சிக் கடிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மருத்துவமனை முதல்வர் ரா.விமலா உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x