குமரியில் கடும் கடல் சீற்றம்: கடலரிப்பால் மீனவ கிராமங்களில் கடல் நீர் புகும் ஆபத்து- மக்கள் அச்சம்

குமரியில் கடும் கடல் சீற்றம்: கடலரிப்பால் மீனவ கிராமங்களில் கடல் நீர் புகும் ஆபத்து- மக்கள் அச்சம்
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் கடும் கடல் சீற்றம் நிலவி வருகிறது. புத்தன்துறை உட்பட மீனவ கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகும் ஆபத்து உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கமாக ஜீன் மாதம் தொடங்கி தொடர்ச்சியாக 3 மாதங்கள கடும் கடல் சீற்றம் ஏற்படுவது இயல்பு.தற்போது வங்க கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து இதன் தாக்கம் கடந்த இரு நாட்களாக குமரி கடலோரப் பகுதிகளில் தென்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் பல இடங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டது. குறிப்பாக புத்தன்துறை, குறும்பனை, தேங்காய்பட்டணம் பகுதிகளில் எழுந்த ராட்சத அலையால் கடலரிப்பு ஏற்பட்டது. இதனால் கரையோர பகுதிகள் இடிந்து விழுந்தன.

புத்தன்துறையில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை தாண்டி தண்ணீர் ஊருக்கும் புகும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்டம் செயற்பொறியாளர் வசந்தி, மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடல் அரிப்பை தடுக்க புத்தன்துறையில் ரூ.35 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

இதைப்போல் கடல் சீற்றத்தால் குளச்சலை அடுத்துள்ள குறும்பனையில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் வீடுகளில் புகும் நிலை ஏற்பட்டது. இப்பகுதியிலும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். குமரி கடல் பகுதியில் கடும் கடல் சீற்றம் நிலவி வருவதால் இப்பகுதியில் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். குமரி கடல் பகுதியில் கடும் கடல் சீற்றம் நிலவி வருவதால் கடந்த இரு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in