

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் மீளவேண்டி கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் ஆயுஷ் வேள்வி நடத்தினர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் உள்ளது.
இங்கு கரோனா தொற்று நோய் மறையவும், மக்கள் அனைவரும் இந்த கொடிய உயிர்க்கொல்லி நோயின் பிடியில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியும் லோக ஷேம யாகம் உட்பட பல்வேறு சிறப்பு யாகங்கள், வேள்விகளை குரு நாம ரிஷி பொன் காமராஜ் சுவாமிகள் நடத்தினார்
இது குறித்து அறிந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காணிமடம் மந்திராலயத்திற்கு வந்தார்.
கரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிக்க வேண்டி வசந்தகுமார் எம்பி காணிமடம் மந்திராலயத்தில் தன்வந்திரி வேள்வி நடத்தினார். அவர் வேள்வி தீயில் வேள்விக்குண்டான பொருட்களை வார்த்து வேள்வி நடத்தி வழிபட்டார்.