Published : 18 May 2020 01:02 PM
Last Updated : 18 May 2020 01:02 PM

அமைச்சருடன் திரையுலகினர் ஆலோசனை: திரையரங்குகள் திறப்பது, படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை நடத்த அனுமதி கோரியும் திரையுலகினர் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். .

தமிழகத்தில் கரோனா தொற்றை ஒட்டி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்க திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிக் கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், பொது இடங்கள், கடற்கரை உள்ளிட்டவை மூடப்பட்டது. இந்நிலையில் மூன்று கட்ட ஊரடங்கு முடிந்து 4 வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கப்பட்ட தளர்விலும் மேற்கண்டவைகளுக்கு அனுமதி இல்லை தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திரைத்துறை ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், லட்சக்கணக்கானோர் மறைமுகமாகவும் பயன்பெறும் துறை. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எவ்வித பணிகளும் நடைபெறாததால் திரைத்துறையே முடங்கி கிடக்கிறது. இதனால் திரைத்துறைச் சார்ந்தோர் மிகவும் இக்கட்டான நிலையில் வாடும் நிலை உள்ளது. சமீபத்தில் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடித்துக்கொடுக்க வேண்டிய தயாரிப்பு வேலைகளுக்கான அனுமதி சமூக விலகலுடன் நடத்திட அரசு அனுமதி அளித்தது.

4-ம் கட்ட ஊரடங்கு நேற்று நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கிலும் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையுலகினர் பிரச்சினை சம்பந்தமாக ஆலோசனை நடத்த கடம்பூர் ராஜு தலைமையில் திரையரங்குகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், சின்னத்திரை படபிடிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையுடன் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்மவணி, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

திரைத்துறையில் உள்ள 25000 தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. அவ்வாறு நடத்த அனுமதித்தால் 5000 தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாக அமைச்சர் கூறியதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x