Published : 18 May 2020 07:46 AM
Last Updated : 18 May 2020 07:46 AM

கரோனாவில் இருந்து தமிழகத்தை பாதுகாக்க முன்மாதிரியாக செயல்படும் முதல்வர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

மதுரையில் மாற்றுத் திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார். அருகில், ஆட்சியர் டி.ஜி.வினய், மாநக ராட்சி ஆணையர் விசாகன், ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர்.

மதுரை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், முதுகுத் தண்டுவடம் பாதித்தவர்களுக்கு மெடிக்கல் கிட் வழங்கும் நிகழ்ச்சி மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ,ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நல திட்ட உதவிகளை வழங்கினர்.

மதுரையில் மாற்றுத் திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார். அருகில், ஆட்சியர் டி.ஜி.வினய், மாநக ராட்சி ஆணையர் விசாகன், ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர். இதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது, 5,928 மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.21.04 லட்சத்தில் அனைத்துப் பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கும் முகக் கவசம், கையுறை, சோப் ஆயில் உள்ளிட்டவற்றை வழங்கியுள் ளோம். மாவட்ட அளவில் 2,752 பேருக்கு உணவுப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பேசியதாவது: கரோனா தொற்றில் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்கும் பணியில் முன்மாதிரியாக முதல்வர் செயல்படுகிறார். மாநில அளவில் மாற்றுத் திறனா ளிகள் உதவிக்காக இலவச ஹெல்ப் லைன்(1077) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை கட்டுப்பாட்டு அறை மூலம் வந்த 5,468 அழைப்புகளில் 1,175 பேர் மாற்றுத் திறனாளிகள். இவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத் துறையால் 2.1 கோடி குடும்ப அட்டைகள் மூலம் 8 கோடி பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் டிஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், விவி. ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x