Published : 12 Aug 2015 08:46 AM
Last Updated : 12 Aug 2015 08:46 AM

தேனாம்பேட்டையில் சரிந்திருந்த கட்டிடம் இடிப்பு

தேனாம்பேட்டையில் குடிநீர் தொட்டி கட்டுவதற்காக குழி தோண்டிய போது சரிந்த வீடு நேற்று மாநகராட்சியால் இடிக்கப்பட்டது.

தேனாம்பேட்டை பக்தவத்சலம் சாலையில் 2 மாடிக் கட்டிடம் ஒன்றில் தரை தளம், முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் குடும்பங்கள் வசித்து வந்தனர். இதில் தரை தளத்தில் இருந்தவர் குடிநீர் தொட்டி கட்டுவதற்காக சுமார் 7 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ளார். இதனால் கட்டிடத்தின் அடித்தளம் பாதிக்கப்பட்டு, நேற்று முன் தினம் மாலை கட்டிடம் சரிய தொடங்கியது.

இதனால் அதில் வசித்து வந்தவர்கள் பயந்து வெளியே ஓடினர். அந்த கட்டிடம் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது சரிந்து நின்றது.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் அசம்பா விதங்கள் நிகழாமல் தவிர்க்க, பக்தவத்சலம் தெருவுக்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், அந்த கட்டிடத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடிப்பதற்கு உத்தரவிட்டனர்.

இடிக்கும் பணி

அந்த கட்டிடம் 20 பணியாளர் கள், 4 இயந்திரங்களைக் கொண்டு நேற்று இடிக்கப்பட்டது. இதனை சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையர் அருண் சுந்தர் தயாளன், மேற்பார்வை யாளர் ராஜேந்திரன், மண்டல அலு வலர் செங்குட்டுவன், உதவி பொறி யாளர் சுந்தரராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x