கரூர் மாவட்டத்தில் ரூ.2.50 கோடிக்கு மது விற்பனை

கரூர் மக்கள் பாதை பகுதியில் மது வாங்குவதற்கான டோக்கன் வழங்குமிடத்தில் வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கும் மதுவாங்க வந்த வாடிக்கையாளர்கள்.
கரூர் மக்கள் பாதை பகுதியில் மது வாங்குவதற்கான டோக்கன் வழங்குமிடத்தில் வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கும் மதுவாங்க வந்த வாடிக்கையாளர்கள்.
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.2.50 கோடிக்கு மது விற்பனையானது.

கரூர் மாவட்டத்தில் ஒரு எலைட் மதுக்கடை உள்ளிட்ட 95 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இவற்றில் தடை செய்யப்பட்ட பகுதியான என்.புதூரில் உள்ள ஒரு கடை தவிர 94 டாஸ்மாக் மதுபான கடைகள் ஒரு வார காலத்திற்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன.

மது வாங்குபவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, கடைகளில் மது வாங்குவதற்கு முன் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்தப்பிறகு மது வாங்க அனுமதிக்கப்பட்டனர். மது வாங்க வந்தவர்களை டோக்கன் பெற்றுக்கொண்டு வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.

கரூர் பேருந்து நிலையில் அமைக்கப்பட்டிருந்த 4 டோக்கன்கள் வழங்கும் இடத்தில் அண்ணா சாலையில் உள்ள கடைக்கு டோக்கன் வழங்கும் இடத்தில் மட்டுமே கூட்டம் இருந்தது மற்ற கடைகளுக்கு கூட்டமில்லை. அனைத்து கடைகளிலும் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரத்தில் ரூ.2.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. கடந்த முறை 43 நாட்களுக்கு பிறகு மே 7ம் தேதி மதுபானக்கடைகள் திறக்கப்பட்டப்போது ரூ.3.65 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.2.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in