Published : 17 May 2020 07:09 AM
Last Updated : 17 May 2020 07:09 AM

உதகையில் காயத்துடன் பிடிபட்ட சிறுத்தை

உதகை அரசு தாவரவியல் பூங்காவின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன. நேற்று காலை அப்பகுதியில் சிறுத்தை படுத்திருப்பதைக் கண்ட பூங்கா பணியாளர்கள், வனத் துறையினருக்கு தெரிவித்தனர்.

மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தலைமையில் வந்த ஊழியர்கள், சிறுத்தையை ஆய்வு செய்தபோது, அதற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் அதைப் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார் கூறும்போது, "பிடிபட்ட ஆண் சிறுத்தைக்கு 6 வயது இருக்கும். குதிக்கும்போது சிறுத்தை காயமடைந்திருக்கலாம். அதன் வயிற்றுப் பகுதியிலும் பிரச்சினை உள்ளது. அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

பேக்கரிகளுக்கு ‘சீல்’

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான அலுவலர்கள், உதகையில் உள்ள பேக்கரி, மளிகைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். உரிய விவரங்கள் இல்லாத பொருட்களைப் பறிமுதல் செய்ததுடன், விதிகளைப் பின்பற்றாத 5 பேக்கரிகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x