வங்கக் கடலில் புயல் சின்னம்: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் புயல் சின்னம்: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

Published on

வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை புயலாக உருவாகி உள்ளதால் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சனிக்கிழமை ஒரிசா மாநிலம் பாரதீப்பிலிருந்து 1330 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கம் மாநிலம் டிகாவிலிருந்து 1250 கி.மீ தொலைவிலும் புயலாக உருவாகி உள்ளது. இது மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடுமையான சூறாவளிக் காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மே 19-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் இந்தப் புயலுக்கு ஆம்பன் என்றுப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் சனிக்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in