

தமிழக அரசின் தலைமைச் செயலர் மீது திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலுவும், தயாநிதி மாறனும் மக்களவையில் உரிமை மீறல் நட வடிக்கை எடுக்க மேற்கொண்டுள்ள முயற்சி துரதிர்ஷ்டவசமானது என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதி காரி தேவசகாயம் தெரிவித்துள் ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் தலைமைச் செய லர் கே.சண்முகம் மீது முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை யும் அதற்கு தலைமைச் செயலர் வெளியிட்ட மறுப்பு அறிக்கை யையும் கவனத்துடன் படித்தேன்.
தற்போதைய நிகழ்வில், டி.ஆர்.பாலு அரசியல் முதிர்ச்சியை காட்டவில்லை. மூத்த அரசியல் வாதியும் முன்னாள் அமைச்சருமான அவர், கரோனா நோய் தொற்று பேரிடர் காலத்தில் அதை திறம்பட கையாளும் பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் குறிப்பாக அரசு ஊழியர்களின் நிர்வாக தலைவராக விளங்கும் தலைமைச் செயலர் சந்தித்து வரும் கடும் நெருக்கடிகளை உணர்ந்திருக்க வேண்டும்.
மக்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் தலைமைச் செயலரை சந்திக்க டி.ஆர்.பாலு நேரம் கேட்டதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் நெருக்கடி மிகுந்த தற்போதைய இக்கட்டான சூழலில் ஒரு லட்சம் கோரிக்கை மனுக்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டை கொண்டுபோனது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
சமர்ப்பிக்கப்பட்ட ஒரு லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது எத்தனை நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு காலக் கெடு தெரிவிக்காததால் மக்களவை உறுப்பினர்களை தலை மைச் செயலர் மதிக்கவில்லை என்று கருத முடியாது. நெருக்கடி மிகுந்த கரோனா பேரிடர் சூழலில் கூட அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்டு உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்து மக்களவை உறுப்பினர் களுக்கு அவர் அதிக மரியாதை அளித்திருத்திருக்கிறார்.
இத்தகைய சூழலில் தலைமைச் செயலர் மீது டி.ஆர்.பாலுவும், தயாநிதி மாறனும் மக்களவையில் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க மேற்கொண்டுள்ள முயற்சி துரதிர்ஷ்டவசமானது. இது பிரச்சினையை இன்னும் பெரிதாக் கும். தற்போதைய இக்கட்டான நேரத்தில் தமிழக அரசு ஊழியர் களின் நிர்வாக மனஉறுதிக்கு இழைக்கப்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய திமுக தலைமை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.