

அதிக விலைக்கு உரங்களை விற்றால், உரிமம் ரத்து செய்யப்படும் என்று மதுரை மாவட்ட வேளாண் இணைய இயக்குநர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்குத் தேவையான உரங்கள் தனியார் உரக்கடைகளிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. யூரியா 3906 மெட்ரிக் டன், டிஏபி 2361 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1754 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 7672 மெட்ரிக் டன் என்ற அளவில் இருப்பில் உள்ளன.
உரங்களை அரசு நிர்ணயித்த விலைக்கே விவசாயிகளுக்கு விற்கப்படவேண்டும். உரங்களை பிஒஎஸ் கருவி மூலம் பட்டியலிட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உரங்களின் விலைப்பட்டியல் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். மேலும் உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985ல் அனுமதி பெறாத பொருட்கள் உரக்கடைகளில் இருப்பு வைத்து விற்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.