Published : 15 May 2020 07:41 AM
Last Updated : 15 May 2020 07:41 AM

மதுரையில் ஊரடங்கால் தொழிலில் நஷ்டம்- அச்சக உரிமையாளர் தற்கொலை

மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் இளங்கோவன் (55). பொன் மேனி பகுதியில் ஸ்கிரீன் பிரிண்டிங் அலுவலகமும், கரி மேடு பகுதியில் அச்சகமும் வைத்திருந்தார். இவர், ஸ்கிரீன் பிரிண்டிங் அலுவலகத் திலுள்ள தனி அறையில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். நேற்று காலை அவர் இறந்து கிடந்தார். எஸ்.எஸ்.காலனி போலீஸார் விசாரணை நடத்தினர். இளங்கோவனின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். ஆனால், அந்த அறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளங்கோவன் தனது வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எழுதி வைத்திருந்த 6 பக் கக் கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: இளங்கோவ னுக்கு 2 மனைவி கள் உள்ளனர்.இரண்டாவது மனைவிக்கு மட்டும் குழந்தை உள்ளது. ஏற்கெனவே கடன் தொல்லையால் அவர் சிரமப் பட்டு வந்துள்ளார். இந்நிலை யில், ஊரடங்கால் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விஷம் அருந்தி தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது அறையில் இருந்து கைப்பற்றிய கடிதத்தில், கடன் தொல்லை, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்வ தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x