நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
Updated on
1 min read

சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருபவர்களால் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் ராதாபுரம், மாவடி, பழவூர், கூடங்குளம், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதியாகி உள்ளது. இத னால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 113 ஆக அதிகரித்திருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 53 பேரில் சிகிச்சைக்குப் பிறகு 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நேற்று மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே கரோனா பாதித்த கடையநல்லூர் அருகே பொய்கை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் 5 வயது மகனுக்கும், சென்னையில் இருந்து வந்த சங்கரன்கோவில் அருகே ஆயாள்பட்டியைச் சேர்ந்த 43 வயது ஆணுக்கும் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து கன்னியா குமரி மாவட்டத்துக்கு, வந்த 10 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது 2 நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இவர்களில் மயிலாடியை சேர்ந்த 65 வயது முதியவர் கரோனா தொற்றால் மரணமடைந்தார். அவரது மக ளுக்கு கரோனா தொற்று உள் ளது.

இதேபோல் சென்னையில் இருந்து ஆளூருக்கு வந்த கணவன், மனைவி, அவர்களின் இரு குழந்தைகளுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் சென்னையில் இருந்து வந்த 5 பேர் கரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in