ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் மறைவு- அரசியல் தலைவர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இரங்கல்

க.மீனாட்சி சுந்தரம்
க.மீனாட்சி சுந்தரம்
Updated on
1 min read

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் மன்ற பொதுச் செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் 12 மணி அளவில் அவர் மரணமடைந்தார்.

இறுதிச்சடங்கு நாகை மாவட்டம் தலைஞாயிறில் உள்ள இவரது இல்லத்தில் இன்று(மே 15) மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இவரது மகன் செல்வக்குமார், நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார்.

க.மீனாட்சி சுந்தரத்தின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டா லின்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்ட மேலவை ஆசிரியர் தொகுதி உறுப்பினருமான க.மீனாட்சி சுந்தரம் மறைவு செய்தியறிந்து மிகுந்த துயரத்துக்கும், துன்பத் துக்கும் உள்ளானேன்.

தொடக்க காலம் முதல் திராவிட இயக்க சிந்தனையாளரான அவர், கருணாநிதியின் அன்புக்கும் அரவணைப்புக்கும் உரியவர்.

என்மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்டிருந்தவர். பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர போரா டியவர். அரசு ஊழியர்களுக்காக திமுக அரசையும் எதிர்த்து நின்றவர். ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்து ஆட்சியிலிருப்போருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இளம் வயதிலேயே ஆசிரியர் சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிரியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் மீனாட்சி சுந்தரம்.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆழ்ந்த இரங்க லையும், அனுதாபத்தையும் தெரி வித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்: தள்ளாத வயதிலும் ஆசிரியர்களின் பிரச்சினை களுக்காக குரல்கொடுத்தவர், ஒருங்கிணைந்த ஜாக்டோ- ஜியோ வுடன் இணைந்து பணியாற்றிய க.மீனாட்சி சுந்தரத்தின் மறைவு ஆசிரியர்கள், அரசு ஊழியர் களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in