புதுச்சேரி தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் பணி- வேலை நேர அதிகரிப்புக்கு எதிர்ப்பு: தொழிலாளர் நலத் துறை அலுவலகம் முற்றுகை

புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்துள்ளதைக் கண்டித்து தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று தர்ணாவில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர்.படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்துள்ளதைக் கண்டித்து தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று தர்ணாவில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர்.படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

புதுச்சேரி தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 12 மணி நேர மாக அதிகரித்ததைக் கண்டித்து தொழிலாளர் நலத் துறை அலு வலகத்தை முற்றுகையிட்டு ஏஐ டியுசி தொழிற்சங்கத்தினர் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

கரோனா ஊரடங்கால் ஏற்பட் டுள்ள இழப்புகளை ஈடுகட்டு வதாகக் கூறி, புதுச்சேரியில் இயங்கும் தொழிற்சாலைகளின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்துக்கொள்ள தொழிலாளர் நலத் துறை அனுமதி அளித்துள்ளது.

இதைக் கண்டித்து நேற்று நடைபெற்ற இப்போராட்டத்துக்கு ஏஐடியுசி மாநில பொதுச் செய லாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.

மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் பங்கேற்றோர் பேசியபோது, “ஆசியா கண்டத் திலேயே 8 மணி நேர வேலை உரிமையை உயிர் தியாகத்தின் மூலம் பெற்ற புதுச்சேரியில் வேலை நேரத்தை அதிகரிப்பதை ஏற்க முடியாது. பாஜக கொண்டு வரும் இந்த நடைமுறையை, அக்கட்சி அல்லாத ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றுவதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கெனவே குரல் கொடுத்து வரும் நிலையில், புதுச் சேரியில் காங்கிரஸ் அரசு இதைச் செய்துள்ளது.

மத்திய பாஜக அரசின் அடி யொற்றியே புதுச்சேரி அரசு செயல்படுவதை இது காட்டுகிறது. வேலை நேர அதிகரிப்பு என்பது தொழிலாளர்களை சுரண்டுவது மட்டுமல்ல, ஆட்குறைப்புக்கும் வழிவகுக்கும்.

இக்கோரிக்கைக்கு தீர்வு காணாவிட்டால் புதுச்சேரியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் படும்” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in