

சேப்பாக்கம் தொகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை ஒரு வாரத்துக்குள் தீர்க்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அரசுக்கு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
சேப்பாக்கம் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி திமுக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏவும், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலருமான ஜெ.அன்பழகன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் கலந்துகொண்டு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அன்பழகன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
சேப்பாக்கம் தொகுதி மக்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதற்காகவும், இத்தொகுதி எதிர்க்கட்சி தொகுதி என்பதாலும், இங்குள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் அருகில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இத னால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இத்தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கிடைக்கும் குறைந்த அளவு குடிநீரிலும் கழிவுநீர் கலந்துள்ளது. குடிநீர் வாரிய தொட்டிகளை அதிமுகவினர் கைப்பற்றி, ஒரு குடம் ரூ.5-க்கு மேல் கட்டணம் வசூலித்து விநியோகம் செய்து வருகின்றனர். இத்தொகுதியில் பிரதான சாலை களைவிட, குறுந்தெருக்கள் அதிக மாக உள்ளன. இவை சீரமைக்கப் படாமல், பாழடைந்து பயன்பாட் டுக்கு உகந்ததாக இல்லை. இத னால் இத்தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.
எனவே இத்தொகுதியின் அடிப் படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி அதிகாரிகளிடம் புகார் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பகுதிச் செயலர் எஸ்.மதன்மோகன், தலைமை நிலைய செயலர் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.