வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு நோய் தொற்று: கரோனா பாதிப்பில் சதத்தை எட்டும் நெல்லை மாவட்டம்

வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு நோய் தொற்று: கரோனா பாதிப்பில் சதத்தை எட்டும் நெல்லை மாவட்டம்
Updated on
1 min read

வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருவோரில் பலருக்கு நோய் தொற்று உறுதியாகி வருவதால் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சதத்தை எட்டி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 93 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் ஐந்து பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்கு அரியகுளம், மாதவ குறிச்சி, காவல்கிணறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து வந்த இவர்களை மாவட்ட எல்கையான கங்கைகொண்டானில் சோதனை நடத்தியபோது கண்டறியப்பட்டது.

இவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 98 ஆக அதிகரித்திருக்கிறது.

வரும் நாட்களில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருவோர் பலருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படும் நிலையில் எண்ணிக்கை சதத்தை தாண்டும் நிலை உள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in