

சென்னை பல்லாவரம் கணபதி புரம் பெரிய ஏரி, தாம்பரம் கன்னட பாளையம், செம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் குப்பை கொட்டப் படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி குடியிருப்பு சங்கங்கள் மற்றும் தனிநபர் சார்பில் சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தீர்ப்பாயத்தின் 2-வது அமர்வு நீதிபதி பி.ஜோதிமணி, தொழில் நுட்ப உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் முன்பு இந்த மனுக்கள் கடந்த மாதம் விசார ணைக்கு வந்தன. அப்போது, ‘அமர்வின் உத்தரவு கிடைத்த 10 நாட்களுக்குள் பெரிய ஏரியை பல்லாவரம் நகராட்சி புனரமைப்பு செய்ய தடையில்லா சான்று வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சாத்தியமுள்ள அனைத்து இடங்களிலும் செயல் படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு ஆலோசனையும் வழங்கினர். விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. ‘பல்லாவரம், செம்பாக்கம் ஏரிகளை புனரமைப்பது குறித்து ஆய்வறிக்கை தயாரித்து, தீர்ப் பாயத்தில் செப்டம்பர் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். பல்லாவரம் நகராட்சியின் கோரிக் கையை நகராட்சி நிர்வாகத் துறை பரிசீலித்து ஏரி புனரமைப்புக்கான உத்தரவை உடனே வழங்க வேண்டும். மேலும், ஏரியை புனரமைப்பது பொதுப்பணித் துறையா, பல்லாவரம் நகராட்சியா என்பதையும் முடிவு செய்ய வேண் டும். செம்பாக்கம் ஏரிப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைப்பது தொடர்பான செம்பாக்கம் நகராட்சி யின் கோரிக்கை நிராகரிக்கப்படு கிறது’’ என்று உத்தரவிட்ட உறுப்பி னர்கள், விசாரணையை செப். 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.