

கூடங்குளம் அணு மின்நிலைய வளாகத்தில் வெளி மாநில தொழிலாளர்களின் போராட்டத்தி ன்போது தாக்குதலுக்கு ஆளான காவலருக்கு ரூ.2 லட்சமும் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின்நிலைய வளாகத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்கள், அந்தந்த மாநில அரசுகளின் முறையான அனுமதியுடன் படிப்படியாக அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் மே 9-ம் தேதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது சில தொழிலாளர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதில், கூடங்குளம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதா மற்றும் வாகன ஓட்டு நரான காவலர் சக்திவேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொழிலாளர்கள் கலைந்து சென் றனர்.
இந்நிகழ்வில் பலத்த காயம டைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சமும் முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்க உத் தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழி லாளர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.