வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத் துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடியுடன்கூடிய கன மழை பெய் யும்.

தெற்கு அந்தமான், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையையொட்டி இந் தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மே 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி ஆகிய 4 மாவட் டங்களில் அதிகபட்ச வெப் பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அந்தமான் பகுதியில் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும். அந்த மான் மற்றும் நிகோபார் பகுதியில் வரும் 16-ம் தேதி தென்மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் நீடிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக பேச்சிப்பாறையில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலாடியில் 30 மி.மீ., பாம் பன், தொண்டி, சித்தார், அம் பாசமுத்திரத்தில் தலா 20 மி.மீ., பாபநாசம், ஆய்க்குடி, திருவாரூர், நீடாமங்கலத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in