

கரோனா ஊரடங்கால் வாழ்வா தாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மனஅழுத்தத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமக தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான வழி, வீட்டில் இருப்பது மட்டும்தான் எனும்போது அனைவரையும் வீட்டில் இருக்க செய்வதற்கு ஒரேவழி பொருளாதார நிவாரணம் அளிப்பதுதான். குறிப்பிட்ட தொழிலை நம்பி வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் மக்கள், சுய உழைப்பை இனியும் தியாகம் செய்து வீட்டில் இருக்காமல், பொருளாதார மன அழுத்தத்தால் வெளியில் வரும் சூழல்உருவாகலாம். ஆகையால் அவர் களின் மன அழுத்தத்தை அரசு போக்க வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் ஒருங்கிணைந்த முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். சுய கட்டுப்பாட்டோடும், பாதுகாப்போடும் தீவிரமாக சமூக இடைவெளியை மேலும் சில மாதங்களுக்கு தவறாமல் மக்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.