

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்துக்கான இலவச பருப்பு, சர்க்கரை, சமையல்எண்ணெய் வழங்க ரூ.219 கோடிஒதுக்கி அரசாணை வெளியிடப்பட் டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள தால் வாழ்வாதாரம் இழந்த மக் களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதத்துக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
முதல்வர் அறிவிப்பு
தொடர்ந்து மே மாதத்துக்கு இலவச அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜூன் மாதத்துக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இதற்கான நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
அந்த அரசாணையில், 2 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரத்து 281 குடும்ப அட்டைகளுக்கு, மத்திய அரசின் 11 ஆயிரத்து 108 டன் ஒதுக்கீடு தவிர 9 ஆயிரத்து 667 டன் பருப்புக் காக ரூ.29 கோடியே 20 லட்சத்து 620, ஒரு லிட்டர் பாமாயில் வழங்க ரூ.86 கோடியே 22 லட்சத்து 44 ஆயிரத்து 391 ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரிசி, சர்க்கரை மற்றும்அந்தியோதயா குடும்ப அட்டை களுக்கு சர்க்கரை வழங்க 43 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு ரூ.103 கோடியே 91 லட்சத்து 59 ஆயிரத்து 476 என ரூ.219 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரத்து 487 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.