

தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வட்டார கல்வி அலுவலர் தனது சொந்த செலவில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதூர் எனும் பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வட்டார கல்வி அலுவலர் தனது சொந்த செலவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
கரோனா வைரஸ் தடுப்பு பணியில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டார கல்வி அலுவலர் பி.சரளா, புதூர் அருகே சிவலார்பட்டியில் உள்ள தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வண்ணம், அவர்களது குடும்பத்துக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிவெடுத்தார்.
தொடர்ந்து, சிவலார்பட்டி ஊராட்சி தலைவர் சக்திவேல் உதவியுடன், நேற்று 40 தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வட்டார கல்வி அலுவலர் சரளா வழங்கினார்.