மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி: நெல்லையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 93 ஆனது

மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி: நெல்லையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 93 ஆனது
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மேலும் 3 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று வரையில் 90 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 58 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருந்தனர். மேலப்பாளையத்தை சேர்ந்த 83 முதியவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மாவட்டத்தில் கங்கைகொண்டான் சோதனை சாவடியில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஏர்வாடி, கூடங்குளம், வடக்கு விஜயநாராயணம் பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 93 ஆகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in