மும்பை தாராவியில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் வந்த 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்ட கார்.
கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்ட கார்.
Updated on
1 min read

மும்பை தாராவியில் இருந்து கோவில்பட்டி பகுதிக்கு காரில் வந்த 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் கண்காணிக்கப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று மதியம் 2.30 மணியளவில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில், 6 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் இருந்தனர். இவர்கள் மும்பை தாராவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களது பூர்வீக ஊர் கயத்தாறு அருகே கே.சிவஞானபுரமாகும். தற்போது ஊரடங்கு 50 நாட்களுக்கு மேல் தொடருவதால் அவர்கள், அம்மாநில அரசிடம் அனுமதி பெற்று சொந்த ஊருக்கு வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, அதில் 9 பேரையும் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சளி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வந்த காருக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in