

கரோனா ஊரடங்கு அமல்படுத்தி 48 நாட்கள் ஆன நிலையில், நேற்று முதல் 34 வகை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதனால் நேற்று காலை முதல் தேநீர்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதனால் 20 சதவீத விற்பனையே இருந்தது. குறிப்பாக, புரோட்டா அதிகம் வாங்கிச் சென்றனர். இது குறித்து தேனி ஓட்டல்கள் சங்கச் செயலாளர் பொன்.முருகன் கூறியது:
பேருந்துகள் இயக்கத்தைப் போல ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளை அமைத்து இடைவெளியுடன் மக்கள் சாப்பிட அனுமதித்தால் விற்பனை கூடும்.
பேருந்துகளை முழு அளவில் இயக்கினால்தான் வெளியூர் வாடிக்கையாளர்களும் அதிகம் வரு வார்கள். நேற்று புரோட்டா அதிக அளவில் விற்றது. வீடுகளில் தயாரிக்க முடியாததால் பலர் ஓட்டல்களில் வாங்கி சென்றனர். பிரியாணியும் அதிகமாக விற்றது என்றார்.