

ஊரடங்கால், காலாவதியான வங்கி டெபிட், கிரெடிட் கார்டு களைப் புதுப்பிக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கார்டுகள் அதிகபட்சமாக 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் காலாவதியாகின்றன. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 லட்சம் கார்டுகள் புதுப்பித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஊரடங்கால் வங்கிகளில் குறைந்த அளவுஊழியர்கள் மட்டுமே பணிக்கு வருவதால் பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, காலாவதியாகும் கார்டுகளை புதுப்பித்து புதிய கார்டுகள் வழங்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காலாவதியாகும் ஏடிஎம், கிரெடிட் கார்டுகளைப் புதுப்பித்துத் தருமாறுஏராளமான வாடிக்கையாளர் களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. தற்போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமேவழங்கப்படுகின்றன. ஊரடங்கு முடிந்த பிறகுஇப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்’’ என்றனர்.