இறப்பு, மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல நேரிட்டால் 2 மணி நேரத்துக்குள் இ-பாஸ்: தமிழக அரசு உறுதி

இறப்பு, மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல நேரிட்டால் 2 மணி நேரத்துக்குள் இ-பாஸ்: தமிழக அரசு உறுதி
Updated on
1 min read

ஊரடங்கு நேரத்தில் இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக் காக வெளியூர் செல்ல நேரிட் டால் அதற்கு முன்னுரிமை அளித்து 2 மணி நேரத்துக்குள் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ ஊரடங்கு நேரத்தில் இறப்பு மற்றும் மருத் துவ காரணங்களுக்காக வெளி யூர் செல்ல நேரும்போது இ-பாஸ் கோரி விண்ணப்பித்தால் அதை அதிகாரிகள் உடனே பரிசீலிப்ப தில்லை. எனவே இதுபோன்ற காரணங்களுக்காக இ-பாஸ் கோரி விண்ணப்பித்தால் 1 மணி நேரத்தில் பரிசீலித்து அனுமதி வழங்கவும், காலவரையறை யின்றி 24 மணி நேரமும் பாஸ் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்ய நாராயணா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாரா யணன் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ கார ணங்களுக்காக வெளியூர் செல்ல நேரிட்டால், நியாயமான காரணங் கள் என தெரிந்தால் அந்த விண் ணப்பங்களை தமிழக அரசு உட னுக்குடன் பரிசீலித்து முடிவெ டுத்து வருகிறது. போதிய கார ணங்கள் இன்றி விண்ணப்பிக்கப் படும், சந்தேகத்துக்குரிய விண் ணப்பங்கள் மட்டுமே நிலுவை யில் வைக்கப்படுகின்றன. இப் பிரிவில் மாவட்ட வருவாய் அலு வலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி யின் மேற்பார்வையில் 30 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கான மையம் காலை 8 முதல் நள்ளிரவு 12 வரை செயல் பட்டாலும் இறப்பு மற்றும் மருத் துவ தேவைகள் எனில் அரை மணி நேரத்தில் இருந்து அதிகபட்ச மாக 2 மணி நேரத்துக்குள் பரிசீ லித்து அனுமதி வழங்கப்படு கிறது. அவசர தேவைக்கான கட்டுப்பாட்டு அறை தற்போது 24 மணி நேரமும் செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மே 10, மாலை 6 மணி நிலவரப் படி திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக பெறப் பட்ட 3 லட்சத்து 61 ஆயிரத்து 432 விண்ணப்பங்களில், 3 லட் சத்து 48 ஆயிரத்து 210 விண்ணப் பங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளன. எஞ்சிய 13 ஆயிரத்து 222 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையி்ல் உள்ளன’’ என தெரி விக்கப்பட்டது. அரசு தரப்பி்ன் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in