Published : 12 May 2020 07:09 AM
Last Updated : 12 May 2020 07:09 AM

புதிய குடியிருப்பின் முதல் விற்பனையின்போது நிலத்தின் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டுமே பதிவு: சார்-பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் அறிவுறுத்தல்

பதிவுத் துறை தலைவர் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்-பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஓர் அடுக்குமாடி கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு அதற்கான உரியஅமைப்பிடம் இருந்து முடிவுற்றதற்கான சான்றிதழ் (completion certifi- cate) பெறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் ஒரு பகுதியின் பதிவுக்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த பகுதியின் முதல் பதிவாக இருக்கும் பட்சத்தில், நிலத்தின் பிரிக்கப்படாத பகுதி மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். கட்டிடத்தையும் சேர்த்து பதிவு செய்ய வற்புறுத்தக்கூடாது. அதேநேரம், கட்டுமான ஒப்பந்தத்தை தனியாக பதிவு செய்ய எவ்வித தடையும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கட்டுநர் சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி பிரிவின் மாநில பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறும்போது, “அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் 2-ம் பதிவாக இருந்தால் பிரிக்கப்படாத பகுதி மற்றும் கட்டிடம் சேர்த்து இவற்றின் மதிப்பில் 7% முத்திரைக் கட்டணம், 4% பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். அதேநேரம் முதல் பதிவாக இருந்தால் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் போதும்.

ஆனால், கட்டி முடித்து முடிவு சான்றிதழ் பெற்ற கட்டிடங்களில் ஒரு வீட்டை பதிவு செய்ய, சார்-பதிவாளர்கள் கட்டிடத்தையும் சேர்த்துபதிவு செய்யுமாறு வற்புறுத்திய காரணத்தால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிக்கல்களை கருத்தில்கொண்டு இந்த விளக்கத்தை பதிவுத் துறைத் தலைவர் அளித்துள்ளார். கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை என்பதால், வாடிக்கையாளர்களுக்கு இது வரப்பிரசாதமாகும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x