

நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயத்துக்கு சாதாரணம் மற்றும் சுயநிதி என இரு பிரிவுகளின் கீழ் மின்இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண பிரிவில் மின்வழித்தடம் அமைப்பதற்கான செலவு மற்றும் மின்சாரம் இலவச மாக வழங்கப்படும். சுயநிதி பிரிவில் மின்வழித்தட செலவை விவசாயிகள் வழங்க வேண்டும். மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
சுயநிதி பிரிவில் தட்கல் என்றவிரைவுத் திட்டத்தின் கீழ் மின்இணைப்பு வழங்கப்படுகிறது. இப்பிரிவில் 5 குதிரை திறன் உள்ள மின்மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரைதிறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறன் மோட்டாருக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் வசூ லிக்கப்படுகிறது.
ஜூன் மாதம் தொடக்கம்
இந்நிலையில், நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. வரும் ஜுன் மாதம் முதல் இப்பணி தொடங்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.