தொழில் செய்ய நேரம் ஒதுக்குக: முடி திருத்துவோர் தொழில் சங்கத்தினர் கோட்டாட்சியரிடம் மனு

தொழில் செய்ய நேரம் ஒதுக்குக: முடி திருத்துவோர் தொழில் சங்கத்தினர் கோட்டாட்சியரிடம் மனு
Updated on
1 min read

கோவில்பட்டியில் முடி திருத்துவோர் தொழிலாளர்கள், தாங்கள் வேலை செய்ய நேரம் ஒதுக்கி தர வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

கோவில்பட்டி முடித்திருத்துவோர் தொழிலாளர் சங்கம் சார்பில் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி வட்டத்தில் முடித்திருத்தும் மருத்துவ சமுதாயத்தை சுமார் 600 குடும்பங்கள் உள்ளன.

எங்களது தொழில் முடித்திருத்துவது தான். எங்களுக்கு வேறு தொழில் கிடையாது. தற்போது கரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 50 நாட்கள் நிறைவடைந்து விட்டது.

மேலும், மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டு, நாங்கள் வறுமையில் வாடுகிறோம். எனவே, நாங்கள் மீண்டும் முடித்திருத்தும் வேலையை மேற்கொள்ள நேரம் ஒதுக்கி தர வேண்டும். அல்லது அரசு ஏதாவது நிதி உதவி செய்து, எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

இதே போல், ஐந்தாம் தூண் நிறுவனர் அ.சங்கரலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் க.தமிழரசன் உள்ளிட்டோர் முடித்திருத்துவோருக்கு பணிகளை மேற்கொள்ள நேரம் ஒதுக்க வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in