குஜராத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த இருவருக்கு கரோனா

குஜராத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த இருவருக்கு கரோனா
Updated on
1 min read

குஜராத்திலிருந்து கோவில்பட்டிக்கு வந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 27 பேர் கடந்த 9-ம் தேதி இரவு கோவில்பட்டிக்கு பேருந்தில் வந்தனர்.

அவர்களை தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் கடம்பூர் அருகே தென்னம்பட்டியை சேர்ந்த சேர்ந்த 41 வயது தொழிலாளிக்கும், கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த 24 வயது தொழிலாளிக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களை பலத்த பாதுகாப்புடன் 108 ஆம்புலன்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அனுப்பி வைத்தனர். அவர்கள் தங்கியிருந்த அறைக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in