Published : 11 May 2020 08:06 PM
Last Updated : 11 May 2020 08:06 PM

கார்த்தி சிதம்பரம் விழாவில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

மதுரை

மதுரையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்ட நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் கரோனா தடுப்பு முக்கிய நடவடிக்கையான சமூக விலகல் சிறிதும் கடைபிடிக்கப்படாதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் ‘கரோனா’ ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கார்த்திக் சிதம்பரம் எம்பி, ‘கரோனா’ ஊரடங்கில் மத்திய அரசு செய்த தவறுகளையும், மாநில அரசு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் பற்றி சட்டிக் காட்டினார்.

கூடவே மக்கள் சமூக இடைவெளியை பிடிக்க வேண்டும் என்றும் ‘கரோனா’வை கட்டுப்படுத்த வெளிநாடுகளை போல் அரசு கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் திரண்டதிற்குதமிழக அரசே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

ஆனால், அவரது இந்த நிகழ்ச்சியில் அவர் கூறிய சமூக இடைவெளி காற்றில் பறந்தது. அவர் கூறிய கருத்துகளை அவரும், அவரது கட்சியினருமே கடைபிடிக்கவில்லை.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளும், அவருமே சிறு இடைவெளி கூட விடாமல் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும், இடித்துக் கொண்டும் நின்று கொண்டிருந்தனர்.

நிவாரண உதவிகள் வழங்கும்போது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காங்கிரஸ் கட்சியினர் பயனாளிகளையும் ஒழுங்குப்படுத்தவும் செய்ய ல்லை.

அதனால், சாதாரண நாட்களில் நிவாரணப்பொருட்களை வாங்க மக்கள் முண்டியடிப்பதுபோல் பயனாளிகள் முண்டியடித்ததால்நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முகவசம் மட்டுமே அணிந்திருந்தனர்.

ஆனால், கட்சியினரும், பயனாளிகளும் சமூக இடைவெளியை கொஞ்சமும் கடைபிடிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x