

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள குடும்பங்களுக்கு உதவிப்பொருட்களை திமுக கொறடா அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக சார்பில் தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் வசிக்கும் மக்கள் ஊரடங்கால் வருவாய் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டநிலையில் நகரில வசிக்கும் பத்தாயிரம் குடும்பங்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.,வும் திமுக கொறடாவுமான அர.சக்கரபாணி மக்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கினார். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றப்பட்டது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மோகன், ஒட்டன்சத்திரம் நகர திமுக செயலாளர் வெள்ளைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், இளைஞர் அணி செயலாளர் பாண்டியராஜ் உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.