தவறான பாதையில் மாணவிகளை ஈடுபடுத்தும் இளைஞர்கள்?- சமூக வலைதளங்களில் பரவும் தகவல்

தவறான பாதையில் மாணவிகளை ஈடுபடுத்தும் இளைஞர்கள்?- சமூக வலைதளங்களில் பரவும் தகவல்
Updated on
1 min read

மதுரை நகரில் உணவு நிறுவ னங்கள், மொபைல் போன் கடைகள் நடத்தி வரும் இளைஞர் கள், மாணவிகள் சிலரை தங்கள் வலைக்குள் சிக்க வைத்து தவறான பாதையில் ஈடுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதில், பெற்றோர்கள் , தங்கள் குழந்தைகள் (மாணவிகள்) பயன்படுத்தும் மொபைல் போன் களை கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை மாநகர் போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறுகையில், இரு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவிகளைத் தொடர்புபடுத்தி முகநூல், வாட்ஸ் அப்களில் தகவல் பரவி வருகிறது.

இது தொடர்பாக யாரும் புகார் தரவில்லை. அந்தப் பதிவு களில் குறிப்பிடப்பட்டுள்ள 3 இளைஞர்கள், தங்களுக்கு எதிராக தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர். மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தரலாம். உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in