ஊரடங்கைப் பயன்படுத்தி அதிக செலவின்றி குழந்தைகளுக்கு திருமணம் நடத்த முயலும் பெற்றோர்

ஊரடங்கைப் பயன்படுத்தி அதிக செலவின்றி குழந்தைகளுக்கு திருமணம் நடத்த முயலும் பெற்றோர்
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய பெண்ணுக்கும், 21 வயது நிரம்பிய ஆணுக்கும் மட்டுமே சட்டப்படி திருமணம் நடத்தலாம். 18 வயதுக்கு குறைவான வயதில் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றால் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழும், 18 முதல் 21 வயதுக்குள் ஆணுக்கு திருமணம் நடைபெற்றால், சட்டப்படியான வயதை அடையாமல் திருமணம் செய்ததற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக் கப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத் தில் கடந்த 2 மாதங்களில் 10 குழந் தைத் திருமணங்களை சமூக நலத் துறை, சைல்டு லைன் அமைப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கள் கூறியபோது, “சட்டப்படியான வயது நிறைவடையாத குழந்தை களுக்கு திருமணம் செய்து வைக் கும் பெற்றோர் பெரும்பாலானோர் ஏழை, எளிய நிலையில் உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் சிலரை மட்டும் அழைத்து, சில ஆயிரம் ரூபாய் செலவிலேயே திருமணத்தை முடித்துவிடலாம் என்று கருதுகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கேட்டபோது திருச்சி மாவட்ட சமூக நலத் துறை வட்டாரங்கள் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் மார்ச் 3-ம் தேதி முதல் கடந்த 2 மாதங்களில் 10 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 5 இடங்களில் திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு, 5 பெண் குழந்தைகளும் கல்வி யைத் தொடர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 5 இடங்களில் திருமணம் முடிந்த நிலையில் 2 மணமகன்கள் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய 3 மணமகன்களை கைது செய்வ தற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in