

தமிழகம் முழுவதும் குடிமராமத் துப் பணிகள் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு அதிமுக சார்பில் கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், தமிழக முதல்வரின் செயல்பா டுகளை மெச்சத் தகுந்தவையாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 32 பேரில், தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடு திரும்பிவிட்டனர்.
கடந்த காலங்களைவிட நிகழாண்டு 20 சதவீதம் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட் டுள்ளது. தமிழகம் முழுவதும் தூர் வாரும் பணியை செய்வதற்காக நாளை(இன்று) டெண்டர் விடப்பட உள்ளது. அதேபோல, குடிமராமத்துப் பணிகளும் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்றார்.