Last Updated : 10 May, 2020 05:10 PM

 

Published : 10 May 2020 05:10 PM
Last Updated : 10 May 2020 05:10 PM

மலேசியாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு விமான கட்டணம் கட்டாயம்; ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

இளையான்குடி

மலேசியாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு விமான கட்டணம் வசூலிப்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாட்டு, உள்நாட்டு விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில், திருமணம், சுற்றுலா, வேலை நிமித்தமாக மார்ச் மாதம் மலேசியா சென்ற 1,000 தமிழர்கள், விமானச் சேவை ரத்தானதால் அங்கேயே முடங்கினர்.

அவர்களை அந்நாட்டு அரசு விடுதிகளில் மொத்தமாக தங்க வைத்துள்ளது. மேலும் மலேசியாவிலும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாததால் அவர்களுக்கு உணவு கிடைப்பதிலும் சிரமம் இருந்தது.

அவர்களை இந்திய அரசு சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது. சமீபத்தில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு 178 பேர் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், தமிழகம் வரும் பயணிகளிடம் விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மலேசியாவில் தவிக்கும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு நகரத் தலைவர் அம்பலம் ராவுத்தர் நெயினார் கூறியதாவது:

"நாங்கள் திருமணத்திற்காக தான் மலேசியா கோலாலம்பூர் வந்தோம். ஊரடங்கால் இங்கு தங்கியுள்ளோம். தற்போது விமானம் மூலம் தமிழகம் அழைத்துச் செல்லும் பணியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால் விமானக் கட்டணம், தங்கும் விடுதிக்கான கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஏற்கெனவே மலேசியாவிலேயே முடங்கியதால் பணமின்றி சிரமப்படுகிறோம். இதனால் விமானக் கட்டணம், தங்கும் விடுதிக்கான கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x